சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே!
இயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் – 2
1.
திட்டங்கள் எமக்குத் தந்தார், நிறைவேற்ற பெலனளித்தார்
மேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தார்
உம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமே
என்றென்றும் ஆனந்தமே – என்றும்
ஆனந்தம் ஆனந்தமே! – சொன்னதைச்
2.
மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தார்
தேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னார்
எதிர்க்கும் சக்திகளை முறிய அடித்திட்டீர்
முற்றிலும் ஜெயம் கொள்ளவே – நாங்கள்
முற்றிலும் ஜெயம் கொள்ளவே! – சொன்னதைச்
3.
பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர்
ஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர்
துணிவோடு சிதறி திசையெங்கும் செல்வோம்
தேசத்தை சுதந்தரிப்போம் – நாம்
தேசத்தை சுதந்தரிப்போம்! – சொன்னதைச்
4.
இந்திய தேசம் எங்கும் நற்செய்தி பரவிச் செல்லும்
பல்வேறு ஜாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்
இந்தியர் பணிந்து சர்வாங்கம் செய்வார்
இயேசுவே தேவன் என்பார் – என்றும்
இயேசுவே தேவன் என்பார்! – சொன்னதைச்
sonnathais seypavare! nampath dhakunthdhavare!
iyesu neer endrume vakku maradhavar – 2
1.
thidtangkal emakkuth dhanthdhar, niraivetrra belanalithdhar
merkonda seyalkalil vetrrikal emakkalithdhar
ummodu natabpathile ethdhanai aananthdhame
enrendrum aananthdhame – endrum
aananthdham aananthdhame! – sonnathais
2.
maberum seyalkalai sathikka emmai azhaithdhar
thesaththin ellaikalai sudhanthdharikkas sonnar
ethirkkum chakthikalai muriya adiththiddir
mutrrilum jayam kollave – nangkal
mutrrilum jayam kollave! – sonnathais
3.
belaveenar engkalaiyum valiya therinththu kondir
oongkiya buyaththinal bidiththu nataththukinrar
thunivodu sidhari thisaiyengkum selvom
thesaththai sudhanthdharippom – nam
thesaththai sudhanthdharippom! – sonnathais
4.
inththiya thesam engkum narseythi paravis sellum
palveru jathikalum iyesuvai eetrrukkolvar
inththiyar paninththu sarvangkam seyvar
iyesuve thevan enbar – enrum
iyesuve thevan enbar! – sonnathais